Monday, July 5, 2010
தோழரின் வரிகள் (வலிகள்?)
பின் வரும் வரிகள் அனைத்தும் எனது தோழர் ஜான்சன் (ஜோன்) சொந்தமானவை
அன்னையே!
உன் கருவறைக்குள்
மீண்டும் என்னை
மீட்டெடுப்பாயா?
இந்த உலகம்
என்னை பயமுறுத்துகிறது
-------------------------------
காதல் கனவுகளில்
வாழ்க்கை எனும் வசந்தத்தை
தொலைத்துவிட்டேன்...
துன்பக் கடலில்
இன்பம் எனும் இலக்கியதை
தொலைத்துவிட்டேன்...
அறியாமை இருளில்
அறிவு எனும் ஆயுதத்தை
தொலைத்துவிட்டேன்....
நட்பு நிழலில்
நண்பன் எனும் நல்லவனை
தொலைத்து விடுவேனோ
என்று பயம்...!!!
இன்று என் வாழ்வில்
--------------------------
உனது திசைகளை
மறந்துவிட்டு எங்கெங்கோ
பறக்கின்றாய்
ஒரு பஞ்சை போல.
ஒன்றை மட்டும்
புரிந்துகொள்
எவ்வளவுதான் உயரப்பறந்தாலும்
உன் ஆணிவேர்கள்
இருப்பது என்னவோ
இந்த பட்டிகாட்டு
மண்ணில்தான் ......
---------------------------
நீ பேசிவிட்டுப் போன பின்பும்
நினைக்கத் தோன்றும் உன் பேச்சும்
நெஞ்சை அள்ளும் உன் சிரிப்பும்
கொஞ்சமாய் என்னை வாட்டும்!
தூதனுப்பும் காற்றினிலும்
தொலை பேசும் பொழுதினிலும்
தூய்மையான பனித்துளியாய்
தூறிடும் உன் நேச மழையில்
நனைந்து சிலிர்த்து...
நட்பென்னும் கடலில் நீந்தி
முக் குளித்து முத்தெடுத்த
முத்தான உன் நட்பில் திளைத்து...
அதரங்கள் அசையாமலே
உன் கரங்களை இறுகப் பற்றிக் கொண்டு
நான் மழலையாய்த் தவழ்கின்றேன்
----------------------------
ஜோன்.............
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment