ஒரு விடியலை எண்ணி
என் மனம்...
இனிமையான காலை பொழுது
அள்ளி தெளித்த பனித்துளிகள்
பசுமையான புள்ளின் வளர்ச்சி
வாசமாய் மாளிகை பூக்கள்
சிட்டுக்குருவியின் கீச்சுக் குரல்கள்
குட்டி குழந்தையின் செல்ல அழுகை
அன்பு அப்பாவின் சின்ன குறட்டை
ஆசை அம்மாவின் தேநீர் குவளை
இதனையும் தோற்றதடி எனக்கு
உள்ளத்தில் கண் சிமிட்டிய
உன் முகம் கண்டவுடன்
தினமும் காணும் இவையெல்லாம்
இன்று மட்டும் புதுமையாய்
தெரிகிறது நீ வந்ததினால்!
எல்லாம் இருக்கட்டும் எப்படி
வந்தாய் என்னுள் நீ !
என்னுடைய அனுமதியின்றி
Jபாலன் ...
Tuesday, July 27, 2010
Friday, July 23, 2010
காத்திருக்கிறேன்
என் தந்தை யாரென தாயிடம்
கேட்க ஆசைப்பட்டேன் தாயோ நான்
காணும் முன்னே சென்று விட்டாள்
என்னை அனாதையாக விட்டுவிட்டு
அவளது வேதனைகள் யாரறிவார் ?
விட்டுவிட்டேன் நான் - கொடுத்தவன்
யாரென தேடிச் சென்று விட்டாளோ?
சுட்டெரிக்கும் வெயில் என்னை
வாட்டி எடுக்க - பசியோடு
நான் அழுகிறேன் அருகில்
அசைவச் சாப்பாடு இருந்தும்
எடுத்து உன்ன தெரியவில்லை
அருகில் இருக்கும் நாயகுட்டிகளோ
தன தாயோடு உணவு உன்ன
நான் மட்டும் அனாதையாய்
குப்பைதொட்டியில் கிடக்கிறேன்
என் கண்ணீரும் வற்றி விட்டது
அழுவதற்கும் ஜீவன் இல்லை
என்னை எடுத்து செல்வதற்கும்
யாருமில்லை!
என் எதிர்காலத்தை எண்ணியபடி
எதிர்பார்ப்போடு நான் பச்சிளம்
குழந்தையாய் குப்பை தொட்டியில்
உனக்காக நான்... Jபாலன்...
கேட்க ஆசைப்பட்டேன் தாயோ நான்
காணும் முன்னே சென்று விட்டாள்
என்னை அனாதையாக விட்டுவிட்டு
அவளது வேதனைகள் யாரறிவார் ?
விட்டுவிட்டேன் நான் - கொடுத்தவன்
யாரென தேடிச் சென்று விட்டாளோ?
சுட்டெரிக்கும் வெயில் என்னை
வாட்டி எடுக்க - பசியோடு
நான் அழுகிறேன் அருகில்
அசைவச் சாப்பாடு இருந்தும்
எடுத்து உன்ன தெரியவில்லை
அருகில் இருக்கும் நாயகுட்டிகளோ
தன தாயோடு உணவு உன்ன
நான் மட்டும் அனாதையாய்
குப்பைதொட்டியில் கிடக்கிறேன்
என் கண்ணீரும் வற்றி விட்டது
அழுவதற்கும் ஜீவன் இல்லை
என்னை எடுத்து செல்வதற்கும்
யாருமில்லை!
என் எதிர்காலத்தை எண்ணியபடி
எதிர்பார்ப்போடு நான் பச்சிளம்
குழந்தையாய் குப்பை தொட்டியில்
உனக்காக நான்... Jபாலன்...
Thursday, July 22, 2010
மனைவி
என்னவளே...
கட்டில் என்னும்
மெத்தையில்
கண்ணயர்ந்து நான்
உறங்க
தாமதமாய் வந்த நீ
என் அருகில் அமர
உன் மடி மீது என்
தலை சாய
உன் மார்போடு என்னை
அணைத்து உச்சந்தலையில்
நச்சென்று நீ
முத்தமிட உணர்சிக்
கொந்தளிப்பில் நான்
நோக்க காதலுடன்
கட்சிதமாய் நீ பார்க்க
நான் கொண்ட
வேதனைகள் யாவும்
பஞ்சாய் போனதடி
போதுமடி இது எனக்கு
இப்பிறவியில் மட்டுமல்ல
எப்பிறவியிலும் என்
மனைவியாய் நீ மட்டும்
இருபதற்கு....
அன்புடன் Jபாலன்...
கட்டில் என்னும்
மெத்தையில்
கண்ணயர்ந்து நான்
உறங்க
தாமதமாய் வந்த நீ
என் அருகில் அமர
உன் மடி மீது என்
தலை சாய
உன் மார்போடு என்னை
அணைத்து உச்சந்தலையில்
நச்சென்று நீ
முத்தமிட உணர்சிக்
கொந்தளிப்பில் நான்
நோக்க காதலுடன்
கட்சிதமாய் நீ பார்க்க
நான் கொண்ட
வேதனைகள் யாவும்
பஞ்சாய் போனதடி
போதுமடி இது எனக்கு
இப்பிறவியில் மட்டுமல்ல
எப்பிறவியிலும் என்
மனைவியாய் நீ மட்டும்
இருபதற்கு....
அன்புடன் Jபாலன்...
Tuesday, July 20, 2010
தூது
மலரே...
நீ உதிர்ந்து விழ
உனக்கு ஆசை இல்லை
உன்னை பறித்து செல்ல
எனக்கும் விருப்பமில்லை
ஆனால் நீ புனிதமாவதர்க்கு
இதை தவிர வேறு
வழியுமில்லை
என்னவள் கூந்தலில் நீ
இருப்பதினால் புனிதமானாய்
உனக்கு உதவிசெய்த
என்னுடைய
காதலையும் சொல்லிவிடு
அவளது காதோரமாய்...
காத்திருக்கிறேன் Jபாலன் ...
கடைசி நிமிடம்...
மரணத்தின் கடைசி
தருவாயில் - நான்
எதையோ எதிர்பார்த்தபடி...
எமனும் பரிதவிக்கிறான்
என் நிலையை கண்டு...
எப்படி சொல்வேன்
என் நிலைமையை
மற்றவர்க்கு...
மணமேடையில் நீ
மற்றவனோடு....
Jபாலன்...
தருவாயில் - நான்
எதையோ எதிர்பார்த்தபடி...
எமனும் பரிதவிக்கிறான்
என் நிலையை கண்டு...
எப்படி சொல்வேன்
என் நிலைமையை
மற்றவர்க்கு...
மணமேடையில் நீ
மற்றவனோடு....
Jபாலன்...
Friday, July 16, 2010
என்னவள் எங்கே?
தென்றலே கூறிவிடு - நீ
தழுவிய என்னவள் எங்கே?
நதியே கூறிவிடு - நீ
நனைத்த என்னவள் எங்கே?
பறவையே கூறிவிடு - நீ
பார்த்து வியந்த என்னவள் எங்கே?
மலரே கூறிவிடு - உன்னை
சூடிய என்னவள் எங்கே?
கவிதையே கூறிவிடு - உன்னை
எழுதிய என்னவள் எங்கே?
கொலுசின் ஒலியே கூறிவிடு - உன்னை
உருவாக்கிய என்னவள் எங்கே?
சூரியனே கூறிவிடு - உன்னை
மயக்கிய என்னவள் எங்கே?
நிலமகளே கூறிவிடு - உன்னை
மிஞ்சும் என்னவள் எங்கே?
நாட்களின் கிழமையே கூறிவிடு - உன்னை
கடந்த என்னவள் எங்கே?
புன்னகையே கூறிவிடு - உன்னை
உதிர்த்த என்னவள் எங்கே?
எதிர்பார்ப்புடன்.....
Jபாலன்...
Wednesday, July 14, 2010
நண்பனுக்காக...
துள்ளி திரிந்த காலங்களை
எண்ணி எண்ணி பார்கிறேன்
விம்மி எழும் வார்த்தைகளை
ஒரு விடியலுக்குள் அடக்குகிறேன்
வெடித்து சிதறும் கண்ணீரை
யாரும் அறியாமல் நீக்குகிறேன்
தனிமையாய் நான் இருக்க
தவிப்பாய் உணர்கிறேன்
தள்ளி தள்ளி போகிறாய்
தளர்ந்து போய் நிற்கிறாய்
மௌனமாய் நான் இருக்க
மறந்ததாய் நினைக்கிறாய்
எண்ணற்ற உணர்வுகளை
எழுத்து வடிவில் தீட்டுகிறேன்
வர மறுக்கும் வார்த்தைகள்
அனைத்தும் கண்ணீராய் வருகிறது
துடைப்பதற்கு தெரியவில்லை
துணிந்து சொல்ல யாருமில்லை
அலை பேசியில் நாம்
பேசுகையில் நினைவுகளை மட்டுமே
பகிர்ந்து கொள்கிறோம்
நிஜங்கள் அனைத்தும் நிழுவையில்
நட்புடன் Jபாலன் ...
புது விதம்
எத்தனையோ மனிதர்களை
கண்டிருக்கிறேன் நான்
ஒவ்வொருவரும் ஒவ்வொரு
விதமாய் - ஆனால் நீ
மட்டும் தனி விதமாய்
கடந்து போன மனிதர்களுக்கு
மத்தியில் நீ மட்டும்
நிரந்தரமாய் என் மனதில்!
Jபாலன்...
கண்டிருக்கிறேன் நான்
ஒவ்வொருவரும் ஒவ்வொரு
விதமாய் - ஆனால் நீ
மட்டும் தனி விதமாய்
கடந்து போன மனிதர்களுக்கு
மத்தியில் நீ மட்டும்
நிரந்தரமாய் என் மனதில்!
Jபாலன்...
Monday, July 12, 2010
Sunday, July 11, 2010
எதிர்பார்ப்பு
என்னவளே...
உன்னுடன் பேசிய ஒவ்வொரு
வார்த்தைகளும் என்னுள்
அளவில்லாத இன்பத்தை
அள்ளி தெளிக்கின்றன
தெளிந்த என் மனமோ
ஏதேதோ உளறுகிறது
சேர்த்து வாய்த்த வார்த்தைகள்
அனைத்தும் மௌனமாய்
மனதுக்குள் கரைகின்றது
வர மறுக்கும் வார்த்தைகளை
எப்படி கூற உன்னிடம்
நான் வாய் திறந்து - பேசுவதற்குள்
விடை பெற்று செல்கிறாய்
என்னிடம் ஏதோ எதிரபர்தவலாய்
Jபாலன்.........
உன்னுடன் பேசிய ஒவ்வொரு
வார்த்தைகளும் என்னுள்
அளவில்லாத இன்பத்தை
அள்ளி தெளிக்கின்றன
தெளிந்த என் மனமோ
ஏதேதோ உளறுகிறது
சேர்த்து வாய்த்த வார்த்தைகள்
அனைத்தும் மௌனமாய்
மனதுக்குள் கரைகின்றது
வர மறுக்கும் வார்த்தைகளை
எப்படி கூற உன்னிடம்
நான் வாய் திறந்து - பேசுவதற்குள்
விடை பெற்று செல்கிறாய்
என்னிடம் ஏதோ எதிரபர்தவலாய்
Jபாலன்.........
Thursday, July 8, 2010
என்ன பேசினோம்?
இன்று நாம் பேசிய
வார்த்தைகளுக்கு
இவ்வளவு இனிமை
இருக்குமா?
இன்றுதான் யோசிக்கிறேன்
பேசிய இவ் வார்த்தைகள்
எப்படி மறந்து போகுமென்று?
மறந்து போகாமல் பாது காப்பேன்
மீண்டும் நம் உரையாடல்
தொடங்கும் வரை
அப்போது எப்படி
பேசுவாயோ?
இப்போதே யோசிக்கிறேன்
நான் ! Jபாலன்...........
வார்த்தைகளுக்கு
இவ்வளவு இனிமை
இருக்குமா?
இன்றுதான் யோசிக்கிறேன்
பேசிய இவ் வார்த்தைகள்
எப்படி மறந்து போகுமென்று?
மறந்து போகாமல் பாது காப்பேன்
மீண்டும் நம் உரையாடல்
தொடங்கும் வரை
அப்போது எப்படி
பேசுவாயோ?
இப்போதே யோசிக்கிறேன்
நான் ! Jபாலன்...........
தனிமை
தனிமையான
சில கணங்களில்
இதயத்தின் நான்கு
அறைகளிலிலும்
சூழ்ந்து கொள்ளும்
வெறுமையின் கனம்
தாங்க முடியாததாய் இருக்கிறது.
கனவுகளைத் தேடி
உறக்கத்துக்கு ஓடிய
விழிகளும் கூட
இப்போதெல்லாம்
வெறும் நினைவுகளை
சுமந்தபடி
விழித்திருப்பது.....
ஜோன்சன்.............
சில கணங்களில்
இதயத்தின் நான்கு
அறைகளிலிலும்
சூழ்ந்து கொள்ளும்
வெறுமையின் கனம்
தாங்க முடியாததாய் இருக்கிறது.
கனவுகளைத் தேடி
உறக்கத்துக்கு ஓடிய
விழிகளும் கூட
இப்போதெல்லாம்
வெறும் நினைவுகளை
சுமந்தபடி
விழித்திருப்பது.....
ஜோன்சன்.............
அதிகாலை பொழுது
இன்று...
அதிகாலையில் கவிதை எழுத
எனது நாள் குறிப்பேட்டை ( டைரி )
எடுத்து எழுதுகோலையும் (பேனா)
திறந்து அமைதியாக நான்
யோசித்து எழுதினேன்
என்ன கொடுமை
ஏதேதோ வருகிறது
கவிதை மட்டும்
வரவில்லை
அதிகாலையில் கவிதை எழுத
எனது நாள் குறிப்பேட்டை ( டைரி )
எடுத்து எழுதுகோலையும் (பேனா)
திறந்து அமைதியாக நான்
யோசித்து எழுதினேன்
என்ன கொடுமை
ஏதேதோ வருகிறது
கவிதை மட்டும்
வரவில்லை
Monday, July 5, 2010
தோழரின் வரிகள் (வலிகள்?)
பின் வரும் வரிகள் அனைத்தும் எனது தோழர் ஜான்சன் (ஜோன்) சொந்தமானவை
அன்னையே!
உன் கருவறைக்குள்
மீண்டும் என்னை
மீட்டெடுப்பாயா?
இந்த உலகம்
என்னை பயமுறுத்துகிறது
-------------------------------
காதல் கனவுகளில்
வாழ்க்கை எனும் வசந்தத்தை
தொலைத்துவிட்டேன்...
துன்பக் கடலில்
இன்பம் எனும் இலக்கியதை
தொலைத்துவிட்டேன்...
அறியாமை இருளில்
அறிவு எனும் ஆயுதத்தை
தொலைத்துவிட்டேன்....
நட்பு நிழலில்
நண்பன் எனும் நல்லவனை
தொலைத்து விடுவேனோ
என்று பயம்...!!!
இன்று என் வாழ்வில்
--------------------------
உனது திசைகளை
மறந்துவிட்டு எங்கெங்கோ
பறக்கின்றாய்
ஒரு பஞ்சை போல.
ஒன்றை மட்டும்
புரிந்துகொள்
எவ்வளவுதான் உயரப்பறந்தாலும்
உன் ஆணிவேர்கள்
இருப்பது என்னவோ
இந்த பட்டிகாட்டு
மண்ணில்தான் ......
---------------------------
நீ பேசிவிட்டுப் போன பின்பும்
நினைக்கத் தோன்றும் உன் பேச்சும்
நெஞ்சை அள்ளும் உன் சிரிப்பும்
கொஞ்சமாய் என்னை வாட்டும்!
தூதனுப்பும் காற்றினிலும்
தொலை பேசும் பொழுதினிலும்
தூய்மையான பனித்துளியாய்
தூறிடும் உன் நேச மழையில்
நனைந்து சிலிர்த்து...
நட்பென்னும் கடலில் நீந்தி
முக் குளித்து முத்தெடுத்த
முத்தான உன் நட்பில் திளைத்து...
அதரங்கள் அசையாமலே
உன் கரங்களை இறுகப் பற்றிக் கொண்டு
நான் மழலையாய்த் தவழ்கின்றேன்
----------------------------
ஜோன்.............
Subscribe to:
Posts (Atom)