PHOTOSHOP

Thursday, September 15, 2011

எங்கு தேட....?

கட்டுப்பாடற்று அலைகிறது
என் மனது கடிவாளத்தை
தேடுகிறேன் அது இருப்பது
பெண்ணே உன்னிடம் .....
---------------------------------------------------------
ஒரு நொடி உன் முகம்
நான் காணவிடில் என்னையே
தேடிபார்கின்றேன்
நான் இருப்பது இங்கு தானா என்று........

-----------------------------------------------------------------------
என்னை எனக்குள் தேடி
பார்க்க ஆசை
ஆனால் என் இதயம்
முழுவதும் நீயே இருந்தால்
என்னை நான் எங்கு தேட....?

............நானேதான்

உயிர் விட

உன் விரல்களில் நகமாய்
இருக்க ஆசைப்படுகிறேன்
உன்னோடு சேர்ந்து வாழ்வதற்கு
அல்ல
உன் உதடுகளின் நடுவில்
சிக்கி உயிர் விட

- எங்கோ கேட்டது ....

Wednesday, August 18, 2010

எப்படி மறக்க?

என் இதயத்தை கசக்கி
பிழிந்து என் உயிரை
உருவி எடுத்து உபயோகமற்ற
என் இதயத்தை கண்ணீருடன்
காண்கிறேன்....நான் அதில்
உன் உருவம் மட்டும்
அழியாத சித்திரமாய் !!!


Jபாலன் ...

Tuesday, July 27, 2010

எப்படி வந்தாய்?

ஒரு விடியலை எண்ணி
என் மனம்...
இனிமையான காலை பொழுது
அள்ளி தெளித்த பனித்துளிகள்
பசுமையான புள்ளின் வளர்ச்சி
வாசமாய் மாளிகை பூக்கள்
சிட்டுக்குருவியின் கீச்சுக் குரல்கள்
குட்டி குழந்தையின் செல்ல அழுகை
அன்பு அப்பாவின் சின்ன குறட்டை
ஆசை அம்மாவின் தேநீர் குவளை
இதனையும் தோற்றதடி எனக்கு
உள்ளத்தில் கண் சிமிட்டிய
உன் முகம் கண்டவுடன்
தினமும் காணும் இவையெல்லாம்
இன்று மட்டும் புதுமையாய்
தெரிகிறது நீ வந்ததினால்!
எல்லாம் இருக்கட்டும் எப்படி
வந்தாய் என்னுள் நீ !
என்னுடைய அனுமதியின்றி

Jபாலன் ...




Friday, July 23, 2010

காத்திருக்கிறேன்

என் தந்தை யாரென தாயிடம்
கேட்க ஆசைப்பட்டேன் தாயோ நான்
காணும் முன்னே சென்று விட்டாள்
என்னை அனாதையாக விட்டுவிட்டு
அவளது வேதனைகள் யாரறிவார் ?
விட்டுவிட்டேன் நான் - கொடுத்தவன்
யாரென தேடிச் சென்று விட்டாளோ?
சுட்டெரிக்கும் வெயில் என்னை
வாட்டி எடுக்க - பசியோடு
நான் அழுகிறேன் அருகில்
அசைவச் சாப்பாடு இருந்தும்
எடுத்து உன்ன தெரியவில்லை
அருகில் இருக்கும் நாயகுட்டிகளோ
தன தாயோடு உணவு உன்ன
நான் மட்டும் அனாதையாய்
குப்பைதொட்டியில் கிடக்கிறேன்
என் கண்ணீரும் வற்றி விட்டது
அழுவதற்கும் ஜீவன் இல்லை
என்னை எடுத்து செல்வதற்கும்
யாருமில்லை!
என் எதிர்காலத்தை எண்ணியபடி
எதிர்பார்ப்போடு நான் பச்சிளம்
குழந்தையாய் குப்பை தொட்டியில்

உனக்காக நான்... Jபாலன்...




Thursday, July 22, 2010

மனைவி

என்னவளே...
கட்டில் என்னும்
மெத்தையில்
கண்ணயர்ந்து நான்
உறங்க
தாமதமாய் வந்த நீ
என் அருகில் அமர
உன் மடி மீது என்
தலை சாய
உன் மார்போடு என்னை
அணைத்து உச்சந்தலையில்
நச்சென்று நீ
முத்தமிட உணர்சிக்
கொந்தளிப்பில் நான்
நோக்க காதலுடன்
கட்சிதமாய் நீ பார்க்க
நான் கொண்ட
வேதனைகள் யாவும்
பஞ்சாய் போனதடி
போதுமடி இது எனக்கு
இப்பிறவியில் மட்டுமல்ல
எப்பிறவியிலும் என்
மனைவியாய் நீ மட்டும்
இருபதற்கு....

அன்புடன் Jபாலன்...

Tuesday, July 20, 2010

தூது


மலரே...
நீ உதிர்ந்து விழ
உனக்கு ஆசை இல்லை
உன்னை பறித்து செல்ல
எனக்கும் விருப்பமில்லை
ஆனால் நீ புனிதமாவதர்க்கு
இதை தவிர வேறு
வழியுமில்லை
என்னவள் கூந்தலில் நீ
இருப்பதினால் புனிதமானாய்
உனக்கு உதவிசெய்த
என்னுடைய
காதலையும் சொல்லிவிடு
அவளது காதோரமாய்...

காத்திருக்கிறேன் Jபாலன் ...

கடைசி நிமிடம்...

மரணத்தின் கடைசி
தருவாயில் - நான்
எதையோ எதிர்பார்த்தபடி...
எமனும் பரிதவிக்கிறான்
என் நிலையை கண்டு...
எப்படி சொல்வேன்
என் நிலைமையை
மற்றவர்க்கு...
மணமேடையில் நீ
மற்றவனோடு....
Jபாலன்...

Friday, July 16, 2010

என்னவள் எங்கே?


தென்றலே கூறிவிடு - நீ
தழுவிய என்னவள் எங்கே?
நதியே கூறிவிடு - நீ
நனைத்த என்னவள் எங்கே?
பறவையே கூறிவிடு - நீ
பார்த்து வியந்த என்னவள் எங்கே?
மலரே கூறிவிடு - உன்னை
சூடிய என்னவள் எங்கே?
கவிதையே கூறிவிடு - உன்னை
எழுதிய என்னவள் எங்கே?
கொலுசின் ஒலியே கூறிவிடு - உன்னை
உருவாக்கிய என்னவள் எங்கே?
சூரியனே கூறிவிடு - உன்னை
மயக்கிய என்னவள் எங்கே?
நிலமகளே கூறிவிடு - உன்னை
மிஞ்சும் என்னவள் எங்கே?
நாட்களின் கிழமையே கூறிவிடு - உன்னை
கடந்த என்னவள் எங்கே?
புன்னகையே கூறிவிடு - உன்னை
உதிர்த்த என்னவள் எங்கே?

எதிர்பார்ப்புடன்.....

Jபாலன்...