PHOTOSHOP

Sunday, June 20, 2010

எப்படி இருக்க?

மழை துளியாய் நீ இருந்தால்
உன்னை சேகரிக்கும்
நீலக் கடலாய் நான் இருப்பேன்!
வெண் மேகமாய் நீ இருந்தால்
உன்னை அரவணைக்கும் தென்றல்
காற்றாய் நான் இருப்பேன்!
மலராய் நீ இருந்தால்
உன்னை சுற்றி வரும்
வண்டாய் நான் இருப்பேன்!
கவிதையாய் நீ இருந்தால்
உன்னை வாசிக்கும்
வாசகனாய் நான் இருப்பேன்!
அன்புடயவளாய் நீ இருந்தால்
உந்தன் அடிமையாய் நான் இருப்பேன்!
துரோகியாய் நீ இருந்தால்
உன்னை அழித்துவிடும் எமனாய்
நான் இருப்பேன்!
கூறிவிடு அன்பே...
நான் எப்படி இருக்க?

No comments: