சாலை ஓரம் நான் நிற்கையில்
ஒரு குரல் தனது குழந்தைக்கு
உணவு வேண்டும் என்று
ஏமாற்று வேலை இது
என்றெண்ணி நான் மறுக்கையில்
பொங்கி வந்த கண்ணீரை
அவள் அடக்கி விரைந்து
அவ்விடம் விட்டுஅகலுகிறாள்,
அடங்க மறுக்கும் கண்ணீர்
பொங்கி அவள் கன்னங்களில்
வழிய
மற்ற யாரிடமும் யாசகம்
கேட்காமல் சென்று விட்டாள்
எனது உள்மனம் என்னை
அவளது நிலை உண்மை
என உசுப்பி விட
விரைந்தோடுகிறேன் நான்
என்னை விட விரைவாக
சென்றுவிட்டாள் அவள்
வெகு தொலைவில்
எனது கண்களில் கண்ணீர்
பெருக்கெடுத்து வழிய
அமைதியடைய மறுக்கிறது
என் மனது ( இன்றுவரை...)
No comments:
Post a Comment